• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் செவிலியர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு !

February 6, 2021 தண்டோரா குழு

உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் முக்கிய காரணிகளாக பேரிடர் அழிவுகள் அமைந்துள்ளன. இந்த சூழ்நிலையை எதிர் கொள்வது சுகாதார வல்லுநர்களுக்கு ஒரு சவாலாக உள்ளது. பேரழிவு காலங்களில் ஆயத்தம், நடவடிக்கை, மற்றும் மீட்புப்பணி போன்ற ஒவ்வொரு நிலைகளிலும், செவிலியர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இந்திய அரசானது தேசிய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மூலம் மக்களுக்கு சுகாதார சம்பந்தமான உதவிகளை வழங்குவதில் முக்கிய அங்கமாக திகழ்கிறது. தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம் செவிலியர்களுக்கான மேம்பாடு என்ற திட்டத்தின் கீழ் செவிலியர்களுக்கான 5 குறுகிய பாட நெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இக்குழுமமானது பேரிடர் காலங்களில் ஆயத்தம், பதில் நடவடிக்கை – செவிலியர் பங்கு என்ற தலைப்பில், தேசிய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை நிதியுதவி மூலம் பூ சா கோ கல்லூரியில் 7 நாட்கள் (29.01.2021 to 04.02.2021) பயிற்சி முகாம் நடத்தியது.

பயிற்சி முகாமின் முதல் நாளான்று, பூ சா கோ செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர். அ. ஜெயசுதா வரவேற்புரையாற்றி, கருத்தரங்கினை துவக்கிவைத்தார்கள். பேராசிரியர் டாக்டர் (திருமதி) எஸ். ஆனி கிரேஸ் கலைமதி, தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தின் இயக்குனர் சிறப்புரையாற்றியதுடன்,கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளரான கல்லூரி முதல்வர் டாக்டர்.அ. ஜெயசுதா அவர்களையும், பூ சா கோ நிர்வாகத்தையும் பாராட்டி வாழ்த்தினார்.

செவிலியர்களின் திறன்களையும் அறிவையும் மேம்படுத்துவதில் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம் எடுத்துள்ள முயற்சிகள் குறித்தும் விளக்கினார். நம் நாடு சமீபத்தில் பல்வேறு பேரழிவுகளை எதிர்கொண்டுள்ளதால் பேரிடர் காலங்களில் ஆயத்தம்,பதில் நடவடிக்கைகளின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

பயிற்சி முகமானது ஏழு நாட்களுக்கு தனித்துவமான கருப்பொருள்களுடன் திட்டமிடப்பட்டு,பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த செவிலியர் மற்றும் சுகாதார குழு வல்லுநர்கள், பேரழிவிற்கு முன்பின் செய்யப்படவேண்டிய அடிப்படை விஷயங்களை குறித்து விரிவுரை, செய்முறை மூலமும் மற்றும் பேரழிவு காலத்தில் தேசிய, சர்வதேச நிறுவனங்களின் பங்கு பற்றி ஆலோசனை அமர்வுகள், மற்றும் குழு விவாதங்கள் மூலம் விளக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமினை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்க்காக சென்னை செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தின் இயக்குனர் பேராசிரியர் டாக்டர் எஸ். அனி கிரேஸ் கலைமதி மற்றும் டாக்டர் ரதி பாலச்சந்திரன், ஏடிஜி (நர்சிங்), நர்சிங் பிரிவு, MoHFW, இந்திய அரசு ஒருங்கிணைப்பாளரான கல்லூரி முதல்வர் டாக்டர். அ. ஜெயசுதா அவர்களையும், பூ சா கோ நிர்வாகத்தையும் பாராட்டி வாழ்த்தினார். இதில் பங்கு பெற்ற செவிலியர்கள் அனைவரும் இப் பயிற்சி முகாமானது மிகவும் பயனுள்ளதாக அமைத்தது என்றும், பேரிடர் மேலாண்மை குறித்த ஆழமான அறிவைக் கற்றுக் கொண்டதாகவும், அவர்கள் தெரிவித்தனர். இறுதியில் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டன.

மேலும் படிக்க