• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்து முன்னணியினர் மீது பொய் வழக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு

February 5, 2021 தண்டோரா குழு

இந்து முன்னணி கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் அதன் நிர்வாகிகள் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் கடந்த 26ம் தேதி பாரதப் பிரதமரை இழிவுபடுத்தும் வகையில் ஒரு சில அமைப்பினர் சித்தரித்தனர் இதனை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேட்டுப் பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு சில அமைப்பினர் உள்ளே புகுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் ரகளை ஏற்பட்டது.

இந்த சம்பவம் முழுவதும் காவல்துறையினரால் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பொழுது இந்து முன்னணியைச் சேர்ந்த பொறுப்பாளர்களின் சிலரின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஆரம்பகட்ட விசாரணை கூட நடத்தாமல் இந்து முன்னணியைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் தங்கவேலு உட்பட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதில் உள்ள அனைவரும் காவல்துறை சார்பில் தனிப் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த நேரத்தில் அனைவரும் அவர்கள் வீட்டில் இருந்தோம் எங்களுடன் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் இருந்தனர் எனவே பாதுகாப்பு அதிகாரிகளின் தினசரி நடவடிக்கை நாட்குறிப்பை பார்த்து அதில் இந்து முன்னணி நபர்கள் ஈடுபடவில்லை என்பதை போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க