February 5, 2021
தண்டோரா குழு
தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை பி.கே.புதூர் மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி வயது (40) இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ரங்கசாமி என்பவர் நிரந்தர துப்புரவு பணியாளராக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சீதா லட்சுமி என்ற மகப்பேறு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வீடியோ மூலம் வாக்கு மூலம் அளித்து தற்கொலை செய்து கொண்டார். அதில் மருத்துவமனையில் மருந்து கொடுக்கும் பணி செய்பவர் மற்றும் செவிலியர் ஆகிய இருவர் தனியாக ஒரு அறையில் இருப்பதை பார்த்ததாகவும் ,இதனை பழி வாங்கும் நோக்கில் செய்யாத தவரை செய்ததாக மேலிடத்தில் புகார் செய்து அவமானப்படுத்தியதாகவும், மேலும் தனது வேலைக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார். இதற்கு காரணமாக இருந்த 3 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூச்சி மருந்து குடித்து கடந்த 2_நாட்களுக்கு முன் ரங்கசாமி தற்கொலை செய்துள்ளார்.
இதுவரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்து நேற்றய தினம் அரசு மருத்துவமனை முன்பு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தற்போது வரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடபட போவதில்லை என உறவினர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இறந்து மூன்று நாட்களாகியும் சம்மந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என கேள்வி குறியாகவே உள்ளது.