• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ப்ரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் அரேபியன் எக்ஸ்பிரஸ் கிளை துவக்கம் !

February 4, 2021 தண்டோரா குழு

அரேபியாவில் பிரபலமான சவர்மா மற்றும் கிரில் சிக்கனில் தனித்துவ சுவை வழங்கும் அரேபியன் எக்ஸ்பிரஸ் தனது 22 வது கிளையை கோவை ப்ரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் துவக்கியது.

கடந்த 1972 ல் துவங்கி ஊட்டியில் உணவகத்திற்கென தனி முத்திரை பதித்து பின்னர் குன்னூர், கோத்தகிரி, கூடலூர்,மேட்டுப்பாளையம், காரமடை என தனது கிளையை விரிவு படுத்தி உணவக பிரியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ஹோம் மேட் குழுமத்தினர் அரேபியன் எக்ஸ்பிரஸ் எனும் நவீன வகை உணவகத்தை கோவை புரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் துவக்கியுள்ளனர்.

வணிக வளாகத்தின் ஃபுட் கோர்ட் பகுதியில் துவங்கப்பட்டுள்ள இதற்கான விழாவில் ஹோம் மேட் T.N.FORTY THREE.குழுமத்தின் இயக்குனர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அவரது தாயார் மும்தாஸ் மொய்து ஆகியோர் முதல் விற்பனையை துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முஜிபுர் ரஹ்மான்,

வணிக வளாகங்களுக்குள் நுழைந்தாலே அதிக செலவு செய்ய வேண்டுமோ என்ற பொதுமக்களின் எண்ணத்தை மாற்றும் வகையில்,இது வரை எந்த வணிக வளாகத்திலும் வழங்கப்படாத விலையில் பத்து ரூபாய்க்கு டீ வழங்குவதாக கூறிய அவர், அரேபியன் எக்ஸ்பிரஸ் உணவகத்தின் பிரத்யேக சிக்கன் சவுர்மா,மற்றும் கிரில் சிக்கனை இனி கோவை வாழ் மக்கள் சுவைத்து மகிழலாம் என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர்,ஹோம் மேட் குழுமத்தின் கீழ், கஃபே & ரெஸ்டாரண்ட், ஆலப்பி ஹவுஸ், அரேபியன் எக்ஸ்பிரஸ் என்ற மூன்று உணவகங்கள் தனித்தனி சுவையை வழங்கும் வகையில் செயல்படுவதாகவும், இதில் ஆலப்பி ஹவுசில் முழுக்க முழுக்க மீன் உணவுகளை கேரள சுவை மாறாமல் வழங்கி வருவதாக தெரிவித்தார். ஈரானியன் பிரியாணி எனும் சுரபி வகை பிரியாணி அதன் சுவை மாறாமல் வழங்குவதாக கூறிய அவர், அரேபியன் எக்ஸ்பிரஸ் உணவகத்தில் அனைத்து வகையான ஸ்நாக்ஸ்களும் Broasted செய்து தருவதாகவும், குறிப்பாக எங்கள் உணவகங்களின் அனைத்து கிளைகளிலும் கேரளாவில் பிரபலமான பாலாடை பிரதமன் எனும் பாயாசம் கிடைக்கும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க