February 4, 2021
தண்டோரா குழு
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கூறியிருப்பதாவது:
கடந்த ஜனவரி மாதம் 25ம் அன்று நடைபெற்ற 11-வது தேசிய வாக்காளர் தினத்தில் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையினை எளிதாக இணையவழி மூலம் பதிவிறக்கம் செய்ய (e-EPIC) இ-இபிக் முறையினை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. இந்த முறையின் மூலமாக
வாக்காளர் அடையாள அட்டையினை மிகவும் எளிதாக ஆண்ட்ராய்டு செயலி மற்றும் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து அச்சடித்து கொள்ள முடியும்.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, வாக்காளர் அட்டை பெயர் நீக்கம், சேர்தல் சிறப்பு முகாம்கள் மூலம் புதியதாக வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொண்ட வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையினை http://votersportal.eci.gov.in என்ற இணையதளம் மற்றும் வோட்டார் ஹெல்ப் லைன் (Voters’ Helpline App) செயலி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் இதுதொடர்பாக, மாவட்ட வாக்காளர் சேவை மைய எண் 1950 ஐ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.