February 1, 2021
தண்டோரா குழு
நடிகை அனுஷ்கா சர்மா முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் முன்னணி வீரருமான விராட் கோலி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக
இருக்கும் அனுஷ்காவை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த மாதம் 11-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அனுஷ்கா சர்மா, அக்குழந்தைக்கு ‘வாமிகா’ என பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.செல்ல மகளை பார்த்து சிரித்தபடி இருக்கும் விராட் கோலி – அனுஷ்கா சர்மாவின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.