February 1, 2021
தண்டோரா குழு
கோவையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்தியரசு திட்டங்களை பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மோடி முகாம் என்ற பெயரில் மக்களை தேடி உதவிகளை செய்து வருகிறோம். இன்று ஒரு நாள் முழுவதும் மக்களின் இருப்பிடம் நோக்கி செல்வதாக அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி யின் மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.இதன் தொடக்க விழா நிகழ்வு கோவையில் நடந்தது.
நிகழ்வை தொடக்கி வைத்து பேசிய வானதி சீனிவாசன்,
ஒரு குடும்பத்தின் ஒட்டு மொத்த பாதுகாப்பு உறுதி செய்யும் விதமாக மோடி அரசு இருக்கிறது. மக்களின் தேவைகளை செயல்படுத்தும் விதமாக இன்று மோடி முகாம் நடக்கிறது.மேலும் தமிழகம் தான் தேசியளவில் செல்வமகள்திட்டத்தில் முதன்மை இடத்தில் உள்ளது இது பெண் குழந்தைகள் பாதுகாப்பில் உறுதி செய்யப்படுகிறது. என தெரிவித்தார்.