• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முகமது நபி குறித்து அவதூறு பேச்சு – பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் கைது

February 1, 2021 தண்டோரா குழு

மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து அவதூறு பேசியதால் பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமனை போலீசார் கைது செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி கல்யாணராமன் மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்வில் இஸ்லாமியர்களின் இறைதூதர் நபியை இழிவு படுத்தியதாக கூறப்படுகிறது.இதற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கல்யாண ராமனுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் நேற்று இரவு சுமார் 9 மணிக்கு மேல் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமுமுகவினர் உக்கடம் பகுதியில் சாலை மறியலிலும், பி.எஃப்.ஐ., யினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், முகமது நபி குறித்து அவதூறு பேசியதால் பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் மீது மீது மதங்களிடையே பிரிவினை ஏற்படுத்தி மோதல் ஏற்படுத்த முயற்சித்தல், தேசிய ஒருமைபாட்டை சீர்குலைக்க முயற்சித்தல் உட்பட 8 பிரிவுகளில் வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைந்தனர்.

மேலும் படிக்க