• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிப்.2ல் பேமிலி பார் சில்ரன்ஸ் குழந்தைகள் காப்பகத்தின் நிறுவனர் தின விழா !

January 31, 2021 தண்டோரா குழு

வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி போத்தனூர்
அருகே உள்ள ‘ஃபேமிலி பார் சில்ட்ரன்ஸ்’ குழந்தைகள் காப்பகத்தின் நிறுவனர் விழா நடைபெறுகிறது இதில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி.அன்பரசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு ‘ஃபேமிலி பார் சில்ட்ரன்ஸ்’ காப்பகத்தில் இன்று நடைபெற்றது போது காப்பகத்தின் தலைவர் சின்னராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு இந்த காப்பகம் ஆதரவளித்து வருகிறது.இங்குள்ள அடிப்படை வசதிகள் மூலம் 400 குழந்தைகளை அனுமதிக்க முடியும். இப்போது 280 பேர் உள்ளனர். குழந்தைகளை பராமரிக்க 120 பணியாளர்கள் உள்ளனர்.

கடந்த 1971ம் ஆண்டு கனடா நாட்டை சேர்ந்த சான்ரா சிம்சன் அம்மையார் இந்த அறக்கட்டளையை உருவாக்கினார். இன்றளவும் அவரும், பல நிறுவனங்களும் காப்பகத்திற்கு உதவி வருகின்றனர்.இதன் மூலம், ஆதரவற்ற மற்றும் மாற்று திறனாளி குழந்தைகளின் வாழ்கை மற்றும் கல்வியை காப்பகம் மூலம் உறுதி செய்து வருகிறோம்.இந்த சேவையை மக்களுக்கு கூறும் விதமாகவே பிப்ரவரி 2ம் தேதி நிறுவனர் தினம் கொண்டாடுகிறோம். மூன்று வருடமாக அரசு கொடுக்கும் நிதி உதவி வரவில்லை. மாவட்ட ஆட்சியரிடமும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் தெரிவித்ததன் பேரில் விரைவில் நிதி உதவி கிடைக்க உள்ளது.இந்த காப்பகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி, மருத்துவர்கள் என பலதரப்பினர் உறுப்பினர்களாக உள்ளனர். கொரோனா காலத்தில் எஸ்.பி. அன்பரசன் இந்த காப்பகத்தில் உணவுக்காக ரூ.5 லட்சம் வரை வழங்கியுள்ளார் என்றார்.

மேலும் படிக்க