January 30, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் வரும் 1ம் தேதி முதல் மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளதாவது:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்திடும் நடவடிக்கைகளில் ஒன்றாக ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று பெற்ற வந்த மக்கள் குறைதீர்க்கும் முகாம் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதற்கு மாற்றாக பொதுமக்களின் கோரிக்கைகளை இணைவழியாகவும், கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமும், கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்ப்பெட்டி அமைத்தும் பொதுமக்களின் கோரிக்கைகள் பெறப்பட்டன.
இந்நிலையில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்திட அறிவுறுத்தியுள்ளது. அதன்படி வரும் திங்கள்கிழமை முதல் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம்களில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனுக்களை அளித்து தீர்வு பெறலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.