January 30, 2021
தண்டோரா குழு
சி.ஆர்.ஐ 2020-ம் வருடத்திற்கான தேசிய மின் சேமிப்பு விருதை 6-வது முறையாகவும், தொடர்ச்சியாக 4 முறையும் தொடர்ந்து வென்றிருக்கிறது.
இதுவரை சி.ஆர்.ஐ 17,000 மில்லியன் யூனிட்களுக்கும் அதிகமான மின்சாரத்தை சேமித்துள்ளது. மின்சார சேமிப்பது மட்டுமின்றி, சி.ஆர்.ஐ. பம்புகள் கார்பன் படிவதையும் சுமார் 14 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு குறைத்துள்ளது. மின்சக்தியைச் சேமிக்கும் பம்புகள் தயாரிப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்ட சி.ஆர்.ஐ பொறுப்போடு செயல்படுவது மட்டுமல்ல அதேயளவு புதுமையோடும் செயல்படுகிற பிராண்ட் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.
நட்சத்திர குறியீடு பெற்ற பம்புகளைத் தயாரிப்பதற்கு பெயர்பெற்ற சி.ஆர்.ஐ இது வரை தேசம் முழுவதிலும் 1.65 மில்லியனுக்கும் அதிகமான பம்புகளை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. இதனால் விவசாயம், தயாரிப்பு தொழிற்சாலைகள் என்ற பல பிரிவினரும் அதிகளவில் மின் சேமிப்பு செய்ய உதவியிருக்கிறது.
இந்த விருதை மின் சக்தி துறையின் மதிப்புமிக்க மந்திரியான ஆர்.கே. சிங் வழங்க, சி.ஆர்.ஐ குழுமத்தின் இணை நிர்வாக இயக்குனர் ஜி. செல்வராஜ் பெற்றுக்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
மின் சேமிக்கும் அதிக திறன் வாய்ந்த பம்புகளைத் தயாரித்ததற்காக இந்த என்இசி தேசிய விருதை சி.ஆர்.ஐ ஆறாவது முறையாகப் பெற்றிருக்கிறது. இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களும் இந்த நாடும் பெருமளவு ஆற்றலையும் செலவினங்களையும் மிச்சப்படுத்த உதவி செய்திருக்கிறது. இந்த விருதை இந்த வருடம் ஆறாவது முறையாக, அதிலும் நான்கு முறைகள் தொடர்ந்து பெற்றிருக்கிறோம் என்பதை மிகவும் பெருமிதத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். மின்சாரம் சேமிப்பதில் எங்களது விடாமுயற்சியை அறிந்து அதைப் பாராட்டியதற்காக இந்திய அரசாங்கத்திற்கு நன்றி.
இன்னும் அதிகம் உத்வேகத்துடன் வேலை செய்து எங்கள் திறமைகளை மெருகேற்ற இது எங்களை ஊக்குவிக்கிறது. எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களின் ஒவ்வொரு முயற்சியிலும் ஆதரிக்கிற எங்களது வாடிக்கையாளர்கள், டீலர்கள் மற்றும் பங்குதாரர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். எங்களிடம் உள்ள மிகச் சிறந்ததை வெளியே கொண்டுவர உதவிய எங்களது ரிசெர்ச் அண்ட் டெவலப்மென்ட் பிரிவு, பொறியியலாளர்கள், நிர்வாகம் மற்றும் ஒவ்வொரு ஊழியருக்கும் நாங்கள் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம்.
இந்தக் குழுமத்தின் வெற்றிகளில் சிலவற்றை சிறப்பித்துக் காட்ட வேண்டும் என்றால், இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் ஸ்மார்ட் பம்புகளில் அதிகளவான வளங்களை முதலீடு செய்கிற சில நிறுவனங்களில் சி.ஆர்.ஐயும் ஒன்று. இதன் மூலம் சக்தி, நீர், நேரம் மற்றும் பணம் போன்ற சுற்றுச்சூழல் வளங்களைச் சேமிக்க முடிகிறது. அதோடு சி.ஆர்.ஐ இதுவரை 60,000-த்திற்கும் அதிகமான
IoT ஸ்மார்ட் பம்புகளை வழங்கியிருக்கிறது. மின்சாரம் சேமிக்கின்ற AgDSM மற்றும் சோலார் திட்டங்கள் போன்றபல்வேறு திட்டங்களை செயல்படுத்த இந்திய அரசுடன் சி.ஆர்.ஐ ஆதரவாக அத்திட்டங்கள் வெற்றிபெற முழு ஒத்துழைப்பு கொடுத்துவருகிறது.
மின் சேமிப்பதற்கான சி.ஆர்.ஐ-ன் முயற்சிகள், மின் சேமிக்கும் பம்புகளை வடிவமைத்து தயாரிப்பதோடு சூரிய சக்தியை உபயோகிப்பதில் விழிப்புணர்ச்சி உண்டாக்குவதிலும் பெருமளவு உதவி செய்திருக்கிறது. 43,000-த்திற்கும் அதிகமான IoT AC. மற்றும் DC மோட்டார்கள் பொருத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்தோடு செய்யப்பட்ட சோலார் பம்பு செட்களையும் நிறுவியுள்ளது. நீடித்த உழைப்பைக் கணக்கில் கொண்டால், சி.ஆர்.ஐ சோலார் பம்புகள் சோலார் துறையில் அதிக பெயர் பெற்றவை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.