January 29, 2021
தண்டோரா குழு
கோவை முத்துகவுண்டன் புதூர் பகுதியில் இரண்டு ஆம்னி பஸ்கள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஆம்னி பஸ்கள் பெருமளவில் இயக்கபடாமல் உள்ளது.இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் கோவை முத்துகவுண்டன் புதூர் பகுதியில் ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று மதியம் திடீரென இரண்டு ஆம்னி பஸ்கள் தீப்பிடித்து எரிய துவங்கியது. தீ கட்டுபடுத்த முடியாமல்இரண்டு ஆம்னி பேருந்துகளும் முற்றிலுமாக எரிந்து நாசமானது. பேருந்துக்கு அருகில் மக்கள் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து நீண்ட நேரம் போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். பல லட்சக்கணக்கான மதிப்புள்ள பேருந்துகள் எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.