January 28, 2021
தண்டோரா குழு
கோவை சுந்தராபுரம் பகுதியில் மூன்று தலைமுறைகளாக நூறு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் தைப்பூச அன்னதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முருகப்பெருமானுக்கு உகந்த திருநாளான தைப்பூச விழா தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.இந்த நேரத்தில் பல்வேறு இடங்களில் அன்னதான விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.அதன் படி கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள செங்கப்பகோனார் திருமண மண்டபத்தில் தைப்பூச திருவிழா மற்றும் அன்னதான விழா நடைபெற்றது.
மாச்சம்பாளையம் அருள் மிக மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவிலின் பரம்பரை அறங்காவலர் மருதாசலம் தலைமையில் நடைபெற்ற இதில் முன்னதாக சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதணை செய்து பூஜைகள் நடைபெற்றது.இதனை தொடர்ந்து மகா அன்னதானம் நடைபெற்றது.மூன்று தலைமுறைகளாக சுமார் நூறு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று மகா அன்னதானத்தில் சுந்தராபுரம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அன்னதானத்தை திருமதி சுசீலா மருதாசலம், மனோண்மணி,மற்றும் செங்கதிர் பிரகாஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.