• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

22 ஆண்டுகள் திமுக ஆட்சியில் தீர்க்காத பிரச்சனையை 100 நாட்களில் தீர்க்க முடியாது – சீமான் பேட்டி

January 27, 2021 தண்டோரா குழு

22 ஆண்டுகள் திமுக ஆட்சியில் தீர்க்காத பிரச்சனையை 100 நாட்களில் தீர்க்க முடியாது – சீமான் பேட்டி

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கோவை மண்டல வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. 117 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் எனத் தெரிவித்தார். இந்திய மற்றும் திராவிட கட்சிகளை நாம் தமிழர் கட்சி வழிநடத்துகிறது, சுற்றுச்சூழல் பாசறையை முதன் முதலில் நாம் தமிழர் தான் துவங்கியது.

வேல் எடுத்து முப்பாட்டன் முருகன் என்ற போது, என்னை கேலி, கிண்டல் செய்தனர். இவற்றை நான் ஆத்மார்த்தமாக செய்கிறேன். அவர்கள் ஓட்டுக்காக செய்கிறார்கள். தமிழக மீனவர்கள் படுகொலைக்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். 22 ஆண்டுகள் திமுக ஆட்சியில் தீர்க்காத பிரச்சனையை 100 நாட்களில் தீர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் திமுக தான் மக்களுக்கு பிரச்சனை எனவும், திமுக தோற்றாலே மக்களுக்கு பிரச்சனையில்லை எனவும் அவர் கூறினார். எங்கள் ஆட்சியில் ஒரு மீனவரை கூட தொட முடியாது. மீறி தொட்டால் பதவி விலகி விடுவேன் எனவும், ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர்கையெழுத்திட்டு விடுதலையை சாத்தியப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். ஜெயலலிதா நினைவிடம் திறப்பு குறித்த கேள்விக்கு புகழ்பெற்ற மெரினா கடற்கரையை திராவிட கட்சிகள் இடுகாடாகவும், சுடுகாடாகவும் மாற்றிக் கொண்டுள்ளனர் என விமர்சித்தார். எனக்கு ஓட்டு போட்டாலும், போடவில்லை என்றாலும் கவலைப்பட மாட்டேன் எனவும், என்னை தோற்கடிப்பதால் தோற்பது நீங்க தான். ஜெயிக்கும் கட்சிக்கு ஓட்டுப் போட்டால் நீங்கள் தோற்றுப்போவீர்கள் எனவும் சீமான் தெரிவித்தார்.

மேலும் படிக்க