• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாந்தி கியர்ஸ் அரங்காவலராக இருந்த சுப்பிரமணியத்துக்கு பத்மஸ்ரீ விருது

January 25, 2021 தண்டோரா குழு

சாந்தி கியர்ஸ் அரங்காவலராக இருந்த சுப்பிரமணியத்துக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலராக இருந்தவர் சுப்பிரமணியம். இவர் கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை 1972 துவங்கி, இயந்திர உதிரி பாகங்களை பலவேறு நாடுகளுக்கு தயாரித்து கொடுத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்தார். 1996 ம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பினை சுப்பிரமணியம் துவங்கினார். இந்த அமைப்பின் அறங்காவலராக சுப்பிரமணியம் இருந்தார். இந்த நிலையில், சாந்தி கியர்ஸ் நிறுவனம் வேறு நிறுவனத்திற்கு விற்கபட்டது முதல் சாந்தி சோசியல் சர்வீஸ் பணிகளை மட்டும் சுப்பிரமணியம் கவனித்து வந்தார்.

உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை நடத்தி லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி சுப்ரமணியம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கோவை மக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.இந்த நிலையில் மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது சுப்பிரமணியத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 119 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது. அதில் தொழில் துறையில் சிறந்து விளங்கியதாக சுப்பிரமணியத்திற்க்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது. இது கோவை மக்களை பெருமையடையச் செய்துள்ளது.

மேலும் படிக்க