January 22, 2021
தண்டோரா குழு
கோவையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் SAM பிராஞ்ச் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் வங்கியின் உயர் அதிகாரிகள் துவங்கி அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று போன்ற காரணங்களால், ரத்த தானம் செய்கிற சமூக ஆர்வலர்கள் வெளியில் வர இயலாத நிலையில் இரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது போன்ற அவசர நிலை கருதி நாடு முழுவதும் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை லட்சுமி மில் பகுதியில் உள்ள (SAM) சாம் பிராஞ்ச் சார்பாக இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது. துணை பொது மேலாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இதில் வங்கியின் உயர் அதிகாரிகள் துவங்கி அனைத்து ஊழியர்களும் இரத்த தானம் செய்தனர்.
இது குறித்து கிளையின் துணை பொது மேலாளர் பாஸ்கரன் கூறுகையில்,
தற்போது கொரோனா தொற்று போன்ற காரணங்களால் இரத்ததானம் செய்பவர்கள் குறைந்துள்ளதால், ரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் சமூக பொறுப்பை உணர்ந்து எங்களது வங்கி இந்த இரத்ததான முகாமை நடத்துவதாகவும்,வரும் காலங்களில் இந்த சமூக பணியை தொடர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.