January 22, 2021
தண்டோரா குழு
சென்னையைச் சோ்ந்த பால் தினகரன் ‘இயேசு அழைக்கிறாா்’ என்ற பெயரில் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதோடு, கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறாா். அவருடைய நிறுவனங்கள் மீது வந்த வரி ஏய்ப்பு புகாா்களின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை ஒரே நேரத்தில் சோதனை நடத்தினா். தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மூன்றாவது நாளாக சென்னை, கோவை உள்ளிட்ட 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவ மத பிரசாரத்துக்கு வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் நன்கொடையை பால் தினகரன் குறைத்துக் காட்டியிருப்பதும், செலவினத்தை அதிகமாகக் காட்டியிருப்பதும் வருமான வரித் துறை சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.