January 21, 2021
தண்டோரா குழு
கோவையில் இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய ராணுவ பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ராணுவத்தில் தங்களை இணைத்துக்கொள்ள இளைஞர்கள் ஆர்வமுடன் இந்த முகாமில் கலந்து கொண்டுள்ளார்கள்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து 1300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்ட இந்த முகாமில் அவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளான குடிநீர், தேநீர், சிற்றுண்டி, மதிய உணவு, மற்றும் இரவு உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக 24 மணிநேரமும் அவர்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்குவதற்காக தற்காலிக குடில்கள் அமைத்தும் உதவி செய்து வருகிறார்கள் கோவையைச் சேர்ந்த ஆலயம் அறக்கட்டளையின் தலைவர் சந்திரசேகர் மற்றும் ஆலயம் அறக்கட்டளையின் நிறுவனர் சர்மிளா சந்திரசேகர் ஆகியோர் ஆலயம் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் உடன் இணைந்து இந்த சமூக சேவையை செய்து வருகிறார்கள். இவர்களின் சேவையானது பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த இளைஞர்களுக்கு பேருதவியாக இருப்பதால் இந்த முகாமில் கலந்து கொள்ள வந்த இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.
மேலும் இவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள் இந்த முகாமானது. இந்த மாதம் 26ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.