• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாஜக – அதிமுக கூட்டணியை வேரடி மண்ணோடு வீழ்த்த ராகுல்காந்தி வருகிறார் – கே.எஸ்.அழகிரி

January 21, 2021 தண்டோரா குழு

சசிகலா விடுதலையால் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கோவை கோபாலபுரம் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

ராகுல்காந்தி வருகின்ற 23 முதல் 25 ம் தேதி வரை மேற்கு மண்டலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.சீரழித்த ஆட்சியை மாற்றுவது, மதச்சார்பற்ற கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு ராகுல்காந்தி பரப்புரை மேற்கொள்கிறார். பாஜக – அதிமுக கூட்டணியை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த ராகுல்காந்தி தமிழ்நாட்டிற்கு வருகிறார் எனவும் அவர் கூறினார்.

வெற்றி வாய்ப்புள்ள தொகுதிளை கூட்டணி கட்சிகளுக்கு தரக்கூடாது என்ற உதயநிதி ஸ்டாலின் கருத்து குறித்த கேள்விக்கு, வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் என்ன செய்வது எனக் கேள்வி எழுப்பினார். மதச்சார்பின்மை என்ற ஒற்றை நேர்கோட்டில் கூட்டணியில் இணைந்துள்ளதாகவும், இதுபோன்ற சிறு சிறு பிரச்சனை பேசி தீர்த்துக் கொள்வோம் எனவும் அவர் தெரிவித்தார். கமல்ஹாசன் தனித்து நின்றால் பாஜகவிற்கு சாதகமாக இருக்கும் எனவும், கமல்ஹாசனை பீ டீம் என்பதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கமல்ஹாசனால் எங்களது கூட்டணி வாக்கு வங்கி பாதிக்ககூடாது என நினைக்கிறோம் எனவும், கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது எனவும் அவர் தெரிவித்தார். வெற்றி வாய்ப்பு மற்றும் சூழலுக்கு ஏற்ப காங்கிரஸ் தொகுதிகளை கேட்கும் எனவும், மூன்றாவது அணி தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என பாஜக முடிவு செய்வது கொடுமையானது எனவும், சசிகலா விடுதலையால் அரசியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் அவர் கூறினார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது எனவும், 7 பேர் விடுதலை செய்யப்பட்டால் அதை காங்கிரஸ் எதிர்க்கவும் செய்யாது. ஆதரிக்கவும் செய்யாது எனவும் கூறிய அவர், நீதிமன்றம் யாரை வேண்டுமானாலும் மன்னித்து விடுதலை செய்யலாம் எனத் தெரிவித்தார்.இலங்கை கடர்படையின் படகு மோதி இரு மீனவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து கூறுகையில் கடுமையான தண்டனைகளை தவிர்க்குமாறு ராஜபக்‌ஷேவிற்க்கு கோரிக்கை வைத்தோம். இதனை இலங்கையிலுள்ள தமிழக மீனவர்கள் தான் எதிர்ப்பதாகவும், கச்சத்தீவு வழங்கபட்டதில் ராஜதந்திரம் உள்ளதாக தெரிவித்தார்.

சீனாவின் பிடியில் இலங்கை சிக்காமல் இருக்க மேற்கொண்ட நடவடிக்கை எனவும், தற்போது நிலைமை அவ்வாறு இல்லை எனவே பாஜக மீட்க முயற்சிப்பதாக கூறினார். கூட்டணி இல்லாமல் இருந்து இருந்தால் பீகாரில் 40 தொகுதிகளில் தான் தேஜஸ் வெற்றி பெற்று இருப்பார்.கார்ப்பரேட் ஓரிரு வருடங்கள் நல்ல லாபம் கொடுப்பார்கள்.பின்னர் நிறுத்தி விடுவீர்கள். விவசாய சட்டத்தில் குறைந்த பட்ச ஆதாய விலையை சட்டத்தில் கொண்டு வாருங்கள் என்பது தானே கோரிக்கையாக இருப்பதாக தெரிவித்தார். மோடியின் நடவடிக்கையால் பி எஸ் என் எல் நிறுவனத்தை மூடிவிட்டு ஜியோ என்கின்ற ஒற்றை தொலை தொடர்பை தான் உபயோகிக்க வேண்டிய சூழ்நிலைக்கு இந்தியர்கள் தள்ளப்படுவார்கள் என்றார்.

மேலும் படிக்க