January 20, 2021
தண்டோரா குழு
சிஎஸ்கே அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கடந்த 3 ஆண்டுகளாக இருந்த நிலையில் சிஎஸ்கே அணியுடனான தனது ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக ஹர்பஜன் சிங் ட்விட்டர் வாயிலாக அறிவித்துள்ளார்.
14-வது ஐபிஎல் தொடரில் ஹர்பஜன் சிங் விடுவிக்கப்படுவதற்கான பேச்சு எழுந்த நிலையில், ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக அவரே அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியுடனான என்னுடைய ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. சிஎஸ்கே அணிக்காக நான் விளையாடியது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அழகான நினைவுகள், சிறந்த நண்பர்கள் என எப்போதுமே நினைவில் வைத்திருப்பேன்.
2 ஆண்டுகளாக அணியில் நீடித்தேன். சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகள், ஊழியர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.