• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிஐஐ தொழில்துறையின் சிறந்த காப்புரிமை சேவைக்கான விருதை வென்றது யுபிஎல் நிறுவனம்

January 19, 2021 தண்டோரா குழு

ஆறாவது சிஐஐ தொழில்துறை அறிவுசார் சொத்து விருதுகளை வென்றுள்ளது யுபிஎல் லிமிடெட் நிறுவனம். விவசாயிகளின் தேவைகளை எப்போதும் முதலாவதாக முன்னிறுத்தும் யுபிஎல், அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் தயாரிப்புகளையும் சேவைகளையும் உருவாக்கி வருகிறது.

யுபிஎல், அதன் முன்னோடி அறிவு சார் சொத்துரிமை ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக சிறந்த பெரிய அளவிலான காப்புரிமை சேவை (வாழ்வறிவியல் ஃ மருந்து) பிரிவில் விருதை வென்றுள்ளது. ஜீபா போன்ற நிலையான தயாரிப்புகள், ஆதர்ஷ் பண்ணை சேவை போன்ற சேவைகள் ஆகியன அந்நிறுவனம் அடிமட்டத்தில் வெற்றிகரமாக இருப்பதை நிரூபணம் செய்துள்ளன. இவை யுபிஎல்லின் மாபெரும் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான ஒரு உதாரணம்.

மெய்நிகர் முறையில் நடந்த ஐபிஆர் அண்டு சிஐஐ தொழில்துறை ஐபி விருதுகள் மீதான சிஐஐ சர்வதேச மாநாடு விழாவில், யுபிஎல் சார்பாக டாக்டர் விஷால் சோதா விருதைப் பெற்றுக்கொண்டார். இயற்கை வளங்களைத் திறம்பட பயன்படுத்துதல், வானிலை மாற்றத்துக்கேற்ப தகவமைத்துக்கொண்டு அதற்கேற்ப சரி செய்து கொள்ளுதல் உட்பட நிலையான வளர்ச்சி மீதே யுபிஎல்லின் முழுக்கவனமும் உள்ளது. இவையனைத்தும் விவசாயிகளுக்கு தயாரிப்புகள், சேவைகளைக் கிடைக்கச் செய்வதற்கான எங்களது திறனுக்குச் சான்றளிக்கின்றன. இது, விவசாயம் 3.0 எனும் புதுயுக விவசாயத்தை உலகம் முழுக்கப் பரப்பத் தூண்டுகிறது. புதுமை குறித்த எங்களது இடைவிடாத கவனம், ஒவ்வொரு ஆண்டும் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உதவுகிறது. புவிப்பரப்பு முழுவதுமுள்ள விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான 1,500க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை யுபிஎல் கொண்டுள்ளது; 2,500 விண்ணப்பங்களை காத்திருப்பில் வைத்துள்ளது என்று தெரிவித்தார் விஷால்.

இது பற்றி யுபிஎல்லின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் ஆட்ரியன் பெர்சி கூறுகையில், பெருகிவரும் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி, எங்களது யோ சூத்திரங்கள் மற்றும் செயல்முறைகள் சுற்றுச்சூழலுக்குத் தகுந்தவாறு இருக்கத் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். உதாரணமாக, ஸ்டார்ச்சை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பத்தில் சிறுமணி போன்ற மண் பயன்படுத்தப்படும் ஜீபா பெரும்பாலும் ஒரு கடற்பாசி போல செயல்படுகிறது. வேர் மண்டலத்தில் விநியோகிக்கப்படும் இதிலுள்ள ஒவ்வொரு மைக்ரோ துகளும், நீரில் அதன் எடையைப் போன்று பல மடங்கை உறிஞ்சி, தாவரங்களுக்கு நீர் தேவைப்படும்போது விடுவிக்கின்றன. இந்த நீர் மேலாண்மையும், அத்தியாவசியமான நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்களுடனான தொடர்பும், சுற்றுச்சூழலில் குறிப்பிட்ட அளவிலான ஊட்டச்சத்து இழப்பைக் குறைப்பதற்கான காரணமாக விளங்குகின்றன. அதன் மூலமாக சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்தின் மீதான எதிர்மறை தாக்கங்களைக் குறைக்கின்றன என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க