January 19, 2021
தண்டோரா குழு
ஏபிபி நெட்வொர்க் – சி வோட்டர் கருத்து வாக்கெடுப்பில் தமிழகத்தில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு (யுபிஏ) 41.1 சதவீத வாக்குகளும் தமிழகத்தில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு (என்டிஏ) 28.7 சதவீதம் வாக்குகளும் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டின் தற்போதைய தேர்தல் அரசியல் தன்மை குறித்து நேயர்களுக்கு ஒரு கணிப்பை வழங்கியுள்ள முதல் ஊடக நெட்வொர்க் நிறுவனம் ஏபிபி நெட்வொர்க் ஆகும். ஏபிபி நெட்வொர்க், தமது கூட்டு ஆய்வு நிறுவனமான சி வோட்டர் நிறுவனத்துடன் இணைந்து 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொடர்பான முதல் கருத்துக் கணிப்பு ஆய்வை நடத்தியுள்ளது. இந்தக் கருத்துக் வாக்காளர்களின் மனநிலையை அளவிடுவதையும், மாநிலத்தின் அரசியல் சூழலைப் பற்றிய தெளிவான படத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பு வாக்காளர்களின் மனநிலையை புரிந்துகொள்வதையும், மாநிலத்தின் அரசியல் சூழலைப் பற்றிய தெளிவான நிலையை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு, பீகார் சட்டப் பேரவைத் தேர்தல்களின்போது மிகவும் மாறுபட்ட கருத்துக் கணிப்புகள் வெளியாகின. ஆனால் ஏபிபி நெட்வொர்க்கின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு மட்டுமே கிட்டத்தட்ட சரியான முடிவுகளை வழங்கிய கருத்துக் கணிப்பாக ஊடகத் துறையில் இருந்தது. அது ஒரு கடும் போட்டிக்கான கணிப்பை எடுத்துக் காட்டியது மட்டுமல்லாமல், கட்சிகள் பெறும் வாக்குகள் தொடர்பாக ஒரு துல்லியமான கணிப்புத் தகவலையும் வெளியிட்டது.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கருத்துக் கணிப்பு தென் மாநிலங்களில் ஏபிபி நெட்வொர்க்கின் தொடக்கத்தைக் குறிப்பதாக அமைகிறது, இந்த நெட்வொர்க் விரைவில் தமிழக ஊடகச் சந்தையில் வலம் வரக்கூடும்.
ஏபிபி நெட்வொர்க்-சி வோட்டர் பொது மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, தமிழகத்தில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 41.1 சதவீதம் வாக்குகளைப் பெற்று (158 முதல் 166 தொகுதிகளில் வெற்றி பெறக் கூடும்) முன்னிலை வகிக்கிறது, அதே நேரத்தில் தமிழகத்தில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி (என்.டி.ஏ) 28.7 சதவீதம் வாக்குகளைப் பெற்று (60 முதல் 68 தொகுதிகளில் வெற்றி பெறக் கூடும்) இரண்டாவது இடத்தில்
உள்ளது. மற்ற கட்சிகள் 15.7 சதவீதம் வாக்குகளுடன் (0 முதல் 4 இடங்களில் வெற்றி பெறக் கூடும்) மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என தெரிய வந்துள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பில் முதலமைச்சர் வேட்பாளரைப் பொறுத்தவரை திமுக-வின் மு.க. ஸ்டாலின் 36.4 சதவீதம் வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் மிகவும் விரும்பப்படும் முதலமைச்சர் வேட்பாளராக உருவெடுத்துள்ளார், அதற்கு அடுத்தபடியாக தற்போதைய முதலமைச்சரான அஇஅதிமுக-வின் எடப்பாடி பழனிசாமி 25.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
கருத்துக் கணிப்பு முறை மற்றும் ஆய்வு நடைமுறைகளைப் பொறுத்தவரை, சி.வோட்டர் கணிப்பு தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 15000-க்கும் மேற்பட்ட மக்களிடம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இது சிஏடிஐ எனப்படும் (CATI – Computer Assisted Telephone Interviewing) தொலைபேசி வாயிலான கருத்துக் கணிப்பாக நடத்தப்பட்டது.