January 16, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 176 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த எண்ணிக்கை 2,28,911 ஆக உயர்ந்தது.இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,30,183 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களில் 6 பேர் உயிரிழந்தனர்.இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,257 ஆக உள்ளது.அதேசமயம் இன்று மட்டும் 775 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,11,978 ஆக அதிகரித்தது.
தமிழகத்தில் இன்று 52,307 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.இதுவரை 1,51,77,094 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.