January 15, 2021
தண்டோரா குழு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,முன்னாள் எம்.பி.யுமான பி.எஸ்.ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார்.
பி.எஸ். ஞானதேசிகன்,2001ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை,தமிழகத்தில் இருந்து இரு முறை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் துணைத் தலைவராக இருந்தவர். 2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருந்தவர்.
இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த நவம்பர் 11-ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானார்.அவருக்கு வயது 71
அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.