• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மார்கழி மாத கடைசி நாளான இன்று ஆண்டாள் வேடமிட்டு பஜனை ஊர்வலம்

January 13, 2021 தண்டோரா குழு

கோவையில் மார்கழி மாத கடைசி நாளான இன்று ஆண்டாள் வேடமிட்டு பஜனை ஊர்வலம் நடைபெற்றது.

மார்கழி மாதம் என்றாலே மக்கள் விரதம் இருந்து அதிகாலை எழுந்து நீராடி ஆலயங்களுக்குச் சென்று இறைவனைத் தொழுவது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம்.அதன்படியே தெருக்களில் பஜனை செய்து வருவது வழக்கத்தை கொண்டுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பழங்கால நடைமுறையை ஒட்டி மார்கழி மாத திருப்பாவை ஆண்டாள் ஊர்வலங்கள் தொடங்கின.அந்த வகையில் மார்கழியின் கடைசி நாளான இன்று கோவை ஆலந்துரை முதல் பூலுவப்பட்டி வரை ஜெய்ஹிந்த் பவுண்டேசன் மற்றும் பாஷியகார அறக்கட்டளை சார்பில் இரண்டாம் ஆண்டு மங்களம் தரும் மார்கழி நோன்பு திருப்பாவை ஊர்வலம் நடைபெற்றது.

தொடர்ந்து விநாயகர் கோவிலின் வளாகத்தில் குழந்தைகள் ஆண்டாள் வேடமிட்டு பஜனைகள் பாடியபடி நடனமாடினர்.இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சென்டலங்கார ஜீயர் மற்றும் ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் தலைவர் சுரேஷ் பாரதி , பேரூர் பகுதி பொறுப்பாளர் செந்தில் குமார் உட்பட குழந்தைகள்,பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு திருப்பாவை பாடினர்.

மேலும் படிக்க