January 11, 2021
தண்டோரா குழு
கோவையில் இருந்து ஆனைக்கட்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தடாகம் பகுதி இந்திரா நகர் பாலம் அருகே மரத்தில் மோதி விபத்திற்குள்ளனது.
கோவையில் இருந்து ஆனைக்கட்டி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.அப்போது சின்னதடாகம் இந்திரா நகர் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட பாலத்தில் திரும்பும் போது ஓட்டுநர் பிரேக்கை செலுத்தியுள்ளார். ஆனால் பிரேக் பிடிக்காததால் ஓட்டுநர் பேருந்தை விட்டு குதித்துள்ளார்.ஓட்டுனர் இல்லா பேருந்து மரத்தில் மோதி சற்று திரும்பியதில் மண்ணின் இடித்து நின்றதாகவும் கூறப்படுகிறது.
விபத்திற்குள்ளான பேருந்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்தனர். அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர், நடத்துனர் மற்றும் 15க்கும் குறைவான பயணிகள் சிறு காயங்களுடன் தப்பினர். முதலுதவிக்காக பேருந்தின் ஓட்டுநர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பிரேக் பிடிக்காத பேருந்தால் விபத்து ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.