January 11, 2021
தண்டோரா குழு
ரோட்டராக்ட் கிளப் ஆப் சாய்பாபா காலனி மற்றும் இன்னர்வீல் கிளப் இணைந்து ஷெரியா திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை வெற்றிகரமாக முடிந்தனர். இதில் “பதுவ பவன்” என்னும் ஆசிரமத்தில் உள்ள 60 சிறுமிகளுக்கு “சானிடரி கிட்” வழங்கப்பட்டது.
இத்துடன் அங்குள்ள சிறுமிகளுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரொடராக்ட் கிளப் ஆப் சாய்பாபா காலனியின் தலைவர் ரோட்டராக்டர். சங்கர்கனேஷ் மற்றும் செயலாளர் ரோட்டராக்டர். பாலமுருகன் அவர்களும் , இன்னர்வீல் கிளப் இன் தலைவி ரோட்டராக்டர். ஆஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.