January 11, 2021
தண்டோரா குழு
கோவையில் முன்னாள் மாணவர்களின் 50_வது பொன் விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை வெரைட்டி ஹால் பகுதியில் சிட்டி முனிசிபல் உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 1971_ஆம் ஆண்டு படித்த மாணவர்களின் 50″வது பொன் விழா ஆண்டு நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்றது.இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல ஆண்டுகளின் தொடர் நட்பு குறித்து பரிமாறிக்கொண்டதுடன் தொடர்ந்து பாடல்கள் பாடியும்,நட்பு கவிதைகள் கூறியும் மகிழ்ந்தனர்.
இதனை தொடர்ந்து பேசிய பாலசுப்பிரமணியன்,
இப்போது உள்ள மாணவர்கள் அனைவரும் கணிணி வழியில் படிக்கிறார்கள் ,ஆனால் நாங்கள் பள்ளியில் பயிலும் பொழுது புத்தகத்தை பார்த்தும்,சொல்லின் வாயிலாகவும் படித்ததாக கூறினார். அதே போல் இப்போது படிக்கும் மாணவர்கள் எங்களை போல் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி நட்பை வளர்த்தி கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.