January 8, 2021
தண்டோரா குழு
கோவை ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
கோவையை கொண்டாடும் வகையில்13வது கோவை விழா கடந்த ஜனவரி 2 தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் பகுதியாக ஆவாரம்பாளையம் பகுதியிலுள்ள ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பாரம்பரிய பண்பாட்டு விழா என்ற பெயரில் மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து கல்லூரி வளாகத்தில் தோரணங்கள் கட்டியும், ரங்கோலி கோலமிட்டும், கரும்புகள் வைத்தும் மண்பானைகளில் பொங்கலிட்டு வழிபட்டனர்.
இதுகுறித்து கல்லூரி மாணவிகள் கூறுகையில்,
கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடைபெற்று வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சக மாணவிகள் மற்றும் பேராசிரியர்களை சந்தித்து கல்லூரியில் பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
கல்லூரிப் பேராசிரியர்கள் கூறுகையில்,
கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி குறைந்த அளவிலான மாணவிகளை கொண்டு பொங்கல் விழா நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.