January 7, 2021
தண்டோரா குழு
கோவையில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதில் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட அரசு அலுவலர் குடியிருப்பு, கங்கா நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இந்த இடங்களை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாநகராட்சி ஆணையாளர் அலுவலர்களிடம் கூறுகையில், ‘‘மழைநீரை உடனடியாக மோட்டார் பம்புகள் கொண்டு அகற்றிட வேண்டும். அப்பகுதிகளில் வெட்மிக்ஸ் சாலைகள் அமைத்திட வேண்டும்,’’ என்றார்.
இவ்வாய்வின்போது மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.