January 5, 2021
தண்டோரா குழு
அமைச்சர் பெயரை கூறி மருத்துவ படிப்பில் சேர இடம் வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த கோவையை சேர்ந்த பெண் மீது நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பல்லடம் பகுதியைச் சேர்ந்த தனசெல்வன், இவர் தனது மகனுக்கு மருத்துவ சீட் வாங்கி தருமாறு கூறி கோவையை சேர்ந்த பெண் ஒருவர் ரூபாய் 23 இலட்சம் மோசடி செய்துள்ளதாகவும், பணத்தை திரும்ப பெற்று தரக்கோரியும் கோவையில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள மனுவில்,
தனது மகன் திவ்யேஸ். கடந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று நீட் தேர்விலும் வெற்றிபெற்ற நிலையில் மருத்துவ படிப்பில் சேர்ப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருந்ததாகவும் அப்போது எனக்குத் தெரிந்த பாலமுருகன் என்பவர் அவருக்கு தெரிந்த நபர் ஒருவர் உள்ளதாகவும் எனக்கூறி கோவையைச் சேர்ந்த ஃபிர்தௌஸ் சலாவுதீன் என்ற பெண்ணை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அந்த பெண் தன்னுடைய தாயார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அலுவலகத்தில் பணியாற்றுவதாகவும், அதனால் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி முன் தொகையாக ரூபாய் 23 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டார் இந்நிலையில் மருத்துவ சீட் கிடைக்காத்தால் அவர் மீது கோவை புலியகுளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததாகவும் அப்போது ஃபிர்தௌஸ் சலாவுதீன் தான் வாங்கிய பணத்தை திரும்பத் தருவதாக கூறி இருபது லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.
ஆனால் அனைத்து காசோலைகளும் கணக்கில் வங்கி இல்லை என திரும்பி வந்து விட்டதாகவும் அதனால் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்றுத் தரக்கோரி மனுவில் கூறப்பட்டிருந்தது. அமைச்சரின் பெயரை கூறி மோசடி செய்த கோவையை சேர்ந்த பெண் மீது புகார் கொடுத்துள்ள இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.