January 5, 2021
தண்டோரா குழு
வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி கோவையில்எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 45 நாட்களுக்கு மேலாக வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் காலவரையின்றி விவசாயிகள் போராடி வருகின்றனர். இதன் விளைவாக 45 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்துள்ளார். எனவே உடனடியாக வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் எனவும் விவசாய வளங்களை கார்பரேட்க்கு தாரை வார்ப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என கூறி கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் விவசாயிகளைப் போல வேடமிட்டு,விவசாயிகள் தட்டை ஏந்தி பிச்சை எடுப்பது போலவும் தட்டில் மண் இருப்பது போலவும் சித்திரித்து நடந்தனர். கார்ப்பரேட்டுகளை கற்களால் அடித்து விரட்டுவது போலவும் நூதனமான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீஸாரின் தடையை மீற முற்பட்டதால் பின்பு போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கும்,கார்ப்பரேட்க்கும் எதிரான கோஷங்களை எழுப்பினர் இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.