January 4, 2021
தண்டோரா குழு
கோவைக்கு பிரச்சாரம் செய்ய வருகை தர உள்ள தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளதாக அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பாக கோவை வெள்ளலூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏழு உட்பிரிவுகளைச் சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பொதுப்பெயரிடவும், இதற்கான உத்தரவை மத்திய அரசு விரைவில் பிறப்பிக்க. உரிய நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ளும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பரிந்துரை செய்த தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி மற்றும் முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கோவையில் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பாக கோவை,திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 60 கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
முதல் கட்டமாக குறிச்சி, கள்ளிமடை, உள்ளிட்ட சில கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்டமாக அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையின் நிறுவன தலைவர் மனு நீதி சோழன் தலைமையில் வெள்ளலூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிவகுரு பண்ணாடி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். இதில் பேசிய பேரவையின் தலைவர் மனு நீதி சோழன் அண்மையில் பரமக்குடியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் ஒரு மாதத்தில் ஏழு உட்பிரிவுகளை இணைத்து அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்க போவதாக அறிவித்துள்ளது.
தேவேந்திர குல சமுதாய மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும்,மேலும் கோவை மாவட்டத்திற்கு முதல்வர் பிரச்சாரத்திற்கு வரும் சமயத்தில் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளதாக தெரிவித்தார். இந்த கூட்டத்தில் சதீஷ் மள்ளர்,தீனா, பிரவீன், கௌதமன், சத்தியவாணி,பரமேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.