January 3, 2021
தண்டோரா குழு
2021 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவையில் சாலையோரங்களில் இருப்பிடம் இன்றி வசிக்கும் ஆதரவற்றவர்களை அரவணைக்கும் விதமாக அனைவருக்கும் ஆடை என்ற நிகழ்ச்சியை ‘கப்போர்ட் புள்’ என்னும் தன்னார்வ நிறுவனம் சார்பில் இலவசமாக ஆடை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் நிகில் மற்றும் கார்த்திக்ராஜா குழுவினர் கோவை ஆர்எஸ் புரம் காந்தி பார்க் டவுன்ஹால் உக்கடம் குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் உள்ள முதியோர் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு ஆடைகளை வழங்கி வருகின்றனர்.
இது குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில்,
கோவையில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆதரவற்றவர்களை அரவணைத்து வருகிறது. அதில் எங்களின் சிறிய பங்காக கடந்த மாதம் துயில் போர்வை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி தொடர்ந்து அனைவருக்கும் ஆடை என்ற பெயரில் பொது மக்களிடம் பழைய புதிய பயன்படுத்தப்பட்ட பயன்படுத்தப்படாத மற்றும் செறிவராத அனைத்து ஆடைகளையும் ஒருங்கிணைத்து அதனை பரிசோதனை செய்த பின்னர் அதனை சாலையோர மக்களுக்கு எங்கள் குழுவினர் நேரில் சென்று வழங்கி எங்களது சேவையை கோவை மாவட்டத்தில் செய்து வருகின்றனர். இதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றனர்.