• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தடாகம் சாலையில் கண்காணிப்பு கேமராக்கள்,சோதனை சாவடியை துவக்கி வைத்த மாவட்ட எஸ்.பி

January 2, 2021 தண்டோரா குழு

கோவை பெஸ்ட் குழுமங்கள் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பாக தடாகம் சாலையில் கண்காணிப்பு கேமராக்கள்,சோதனை சாவடி,யை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருளரசு துவக்கி வைத்தார்.

கோவை தடாகம் சாலை கே.என். ஜி.புதூரில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் நவீன காவல் துறை கண்காணிப்பு மையம் தொடக்க விழா நடைபெற்றது இந்த விழாவில் பெஸ்ட் குழும நிறுவன தலைமை நிர்வாகி அரிமா வரவேற்று ராம் . ரமணன் பேசினார் . மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அர.அருளரசு 32 நவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நவீன காவல்துறை சோதனை சாவடியை திறந்துவைத்தார்.

அவர் பேசுகையில்,

பெஸ்ட் குழும நிறுவனம் சமூக சேவை யில் ஈடுபட்டு 5 லட்சம் மதிப்பில் இந்த நவீன கண்காணிப்பு காவல் மையத்தை அமைத்து தந்து உள்ளது.இதுபோல் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா க்களையும் நவீன சோதனை சாவடிகளையும் அமைப்பதன் மூலம் சமூகத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்கலாம் என்று தெரிவித்தார்.

பெஸ்ட் குழும நிறுவனங்களின் தலைவர் DR . ஸ்ரீபிரியா கௌரிசங்கர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அர.அருளரசு அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். பெஸ்ட் குழும் நிறுவனங்களின் சட்ட ஆலோசகர் எம். தியாகராஜன் வாழ்த்துரை வழங்கினார்.பெரிய நாயக்கன் பாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, நன்றியுரை வழங்கினார் துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், காவல் உதவி ஆய்வாளர்கள் தாமோதரன், செந்தில்குமார், குப்புராஜ் மனோகரன், சந்திரகுமார் ஆனந்தகுமார் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க