January 2, 2021
தண்டோரா குழு
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை 17 இடங்களில் நடைபெறுகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
வல்லரசு நாடுகள் ஊரடங்கில் உள்ள சூழலில், தமிழ்நாடு நிம்மதியாக உள்ளது. தமிழ்நாடு வெற்றி மாடலை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என பிரதமர் சொல்லியுள்ளார். கொரோனா பாதிப்புகள் குறைந்தாலும் பரிசோதனைகள் குறைக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.உருமாறிய கொரோனா வைரஸ் வந்தாலும் எதிர்கொள்ள வலுவான கட்டமைப்பை கொண்டுள்ளோம்.
தமிழ்நாட்டில் தடுப்பூசி ஒத்திகை 17 இடங்களில் நடைபெறுகிறது. தடுப்பூசி போட 47 ஆயிரத்து 500 மையங்களை கண்டறிந்து உள்ளோம். தடுப்பூசி போட 27 ஆயிரத்து 500 செவிலியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளதாகவும், முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 6 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.