• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையம் சாலையில் பேருந்துகள் செல்ல மாற்றுப்பாதை அறிவிப்பு

January 2, 2021 தண்டோரா குழு

கவுண்டம்பாளையம் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் பேருந்துகள் செல்ல மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் இரு மார்க்கமாகவும் செல்லும பேருந்துகள் இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு கீழ்க்கண்ட மாற்றுப்பாதையில் இயக்கிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்த மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

கோவையிலிருந்து
மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் வாகனங்கள் :

சாய்பாபா கோயில் – தடாகம் – வேலாண்டிபாளையம் – கே.என்.ஜி புதூர் – கணுவாய்- அப்பநாயக்கன் பாளையம் – துடியலூர் – மேட்டுப்பாளையம். அல்லது
சாய்பாபா கோயில் – தடாகம் – வேலாண்டிபாளையம் – கே.என்.ஜி புதூர் – ஜி.என் மில்ஸ் – துடியலூர்- மேட்டுப்பாளையம். அல்லது டி.வி.எஸ் -ஜி.சி.டி – தடாகம் சாலை – கனுவாய் – துடியலூர் – மேட்டுப்பாளையம் வழியாக செல்ல வேண்டும்.

மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி வரும் வாகனங்கள்:

துடியலூர் – வெள்ளக்கிணறு – உருமாண்டம்பாளையம் – உடையம்பாளையம் – மணியக்காரன்பாளையம் – கணபதி – காந்திபுரம். அல்லது கவுண்டர் மில்ஸ் – உருமாண்டம்பாளையம் – உடையப்பாளையம் – மணியக்காரன்பாளையம் – சங்கனூர் எரு கம்பெனி – காந்திபுரம் வழியாக செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க