January 1, 2021
தண்டோரா குழு
அடுப்பில்லாமல் எண்ணெய் இல்லாமல் பாரம்பரிய இயற்கை உணவை சமைத்து கோவையை சேர்ந்தவர் அசத்தியுள்ளார்.
கோவை இராமசாமி நகர்,என்.ஜி.ஆர் நினைவு பள்ளி பின்புறம் அடுப்பில்லா,எண்ணெய் இல்லா இயற்கை சத்து நிறைந்த பாரம்பரிய உணவுகள் விற்கும் புதிய உணவகம் திறக்கப்பட்டது, இயற்கை உணவில் உலக சாதனை படைத்த சிவா என்பவரால் படையல் என்ற இயற்கை உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது புதிய 2021 புத்தாண்டில் இயற்கை உணவை வரவேற்கும் வகையில் இது அமைந்துள்ளது.இந்த சிவா உணவகத்தில் 500க்கும் மேற்பட்ட உணவு வகைகள் உள்ளது. இதில் எந்தவித ரசாயனமும் இல்லாமல் முழுமையாக இயற்கை உணவு பொருட்கள் கொண்டு சமையல் செய்து வருகிறார். மேலும் இயற்கை பாரம்பரிய உணவுப் பொருட்களும் இங்கு கிடைப்பதாகவும் இதனை வாங்கி மக்கள் பயன்பெறலாம் என உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.இந்த உணவகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.