• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏடிஎம் வளாகத்தில் கிடந்த காகிதங்களை அகற்றும் மூன்று வயது சிறுமி

January 1, 2021 தண்டோரா குழு

பல்லடம் பகுதியில் உள்ள ஏடிஎம் வளாகத்தில் கிடந்த காகிதங்களை எடுத்து மூன்று வயது சிறுமி குப்பை தொட்டியில் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பாபு அவரது குழந்தை புகழ்யா(3) வுடன் நேற்று தாராபுரம் சென்று கொண்டிருக்கையில் பல்லடம் பகுதியில் உள்ள ஏடிஎம் வளாகத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.அப்போது அவருடனே சென்ற குழந்தை புகழ்யா ஏடிஎம் வளாகத்தில் கீழே கிடந்த காகிதங்களை எடுத்து அருகில் இருக்கும் குப்பை தொட்டிக்குள் போட்டுள்ளார். இதனை குழந்தையின் தந்தை பாபு அவரது செல்போனில் பதிவு நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி குழந்தை புகழ்யாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. குழந்தை தான் ஏதும் சொல்லாமலே இவ்வாறு செய்தது எனக்கே ஆச்சரியமாக உள்ளது என்று குழந்தையின் தந்தை தெரிவித்தார்.பெரும்பாலான ஏடிஎம் வளாகங்களில் குப்பை தொட்டிகள் இருந்தும் பெரியவர்கள் கூட காகிதங்களை குப்பை தொட்டிக்குள் வீசாமல் செல்லும் போது மூன்று வயது குழந்தை அந்த காகிதங்களை எடுத்து குப்பை தொட்டிக்குள் போட்டு சுத்தம் செய்தது காண்போரை புன்னகைக்க வைக்கிறது.

மேலும் படிக்க