December 31, 2020
தண்டோரா குழு
கோவையில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கோவையில் வீடுகளில் மக்கள் வான வேடிக்கை நடனமாடியும் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
கோவையில் அவினாசி சாலை, பந்தய சாலை, வா வு சி பூங்கா போன்ற பகுதிகள் வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மாநகரம் முழுவதும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மக்கள் கூட்டமின்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இருந்த போதும் 2021 புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்க வீடுகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வான வேடிக்கையுடன் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி நடனமாடியும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.