• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புத்தாண்டை வரவேற்கும் விதமாக தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை

December 31, 2020 தண்டோரா குழு

புத்தாண்டை வரவேற்கும் விதமாக நாளை முதல் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூல் செய்வதால் விவசாயிகள் தங்களது வேளாண் பொருட்களை எடுத்து செல்லவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது. கோவை மாவட்டத்தில் நீலாம்பூர் முதல் வாளையார் வரை உள்ள சுங்க சாவடிகளை முற்றிலும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கோவை கனியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்திவிட்டு செல்லும் வாகனங்கள் அடுத்த 5 நிமிடத்தில் நீலாம்பூர், சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும். அதே போல் திருச்சி ரோடு அருகில் உள்ள சுங்கசாவடி, பொள்ளாச்சி ரோடு அருகில் உள்ள சுங்கசாவடி, மதுக்கரை வரை 6 இடங்களில் சுங்கசாவடி கட்டணங்கள் செலுத்த வேண்டியுள்ளது. சாலை பராமரிப்பு மற்றும் விரிவாக்கம் இல்லாமல்லேயே ஒப்பந்தகாலக்கெடு முடிந்த பின்னரும் தனியார் நிர்வாகம் சுங்கசாவடி வசூல் செய்து வருகிறது என விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறுகையில்,

‘‘இந்த 2021ம் ஆண்டு விவசாயிகளுக்கு ஆதரவான ஆண்டாக அமைய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையான 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும். நாடு முழுவதும் நதிகள் இணைக்கப்பட வேண்டும். அதன் மூலம் உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும். நம் நாட்டில் உள்ள அனைத்து வேளாண் வளங்களையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். போராடி பெற்ற மின்சார திட்டங்கள் மீண்டும் கிடைக்க வேண்டும். சுங்கச்சாவடிகளால் விவசாயிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். நாட்டின் முதுகு எலும்பான விவசாயிகளுக்கு சுங்கச்சாவடி கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும்,’’ என்றார்.

மேலும் படிக்க