December 31, 2020
காலத்துக்கு ஏற்ப மாற்றங்கள் வேண்டும் என்பது பூமியில் உள்ள எல்லா உயிருக்கும் பொதுவான பழமொழி. மாறி வரும் உலகத்தில் சவால்களை சமாளிக்க புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது மட்டுமே ஒரே வழி. மாணவர்களின் பாதுகாப்புக்காக நேரு சர்வதேச பள்ளி, மணிமகுடமாக புதிய தானியங்கி கண்காணிப்பு அமைப்பு அறிமுகம் செய்துள்ளது.
நேரு சர்வதேச பள்ளி, சென்னையில் உள்ள பிளாஸ் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் (CBLAZE Infotech Pvt., Ltd.) இணைந்து முழுமையான பள்ளி மோலண்மை தீர்வுகளை (இஆர்பி), ஆர்எப்ஐடி தொழில்நுட்பத்தில், மாணவர்களை பள்ளி வளாகத்திலும், வாகனங்களில் செல்லும்போதும் கண்காணிக்க புதிய அமைப்பை பயன்படுத்த உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், நேரு குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி மற்றும் செயலாளர் டாக்டர் .பி.கிருஷ்ணக்குமார் முன்னிலையில், சிபிளாஸ் இன்போடெக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர் பி.சென்னகேசவன் மற்றும் நேரு சர்வதேச பள்ளியின் தலைமை ஆசிரியை பிரியா சுரேஷ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.