December 31, 2020
தண்டோரா குழு
கோவையில் இன்று அதிகாலையில் இருந்தே மேகமூட்டத்துடன் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அதே போல பனிப்பொழிவின் தாக்கமும் இம்மாதம் அதிகமாகவே காணப்பட்டது.
இந்நிலையில், திடீரென காலை 8 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதனை தொடர்ந்து கன மழையாக மாறியது. வியாபாரிகள் தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் ஆங்காங்கே தட்டுத்தடுமாறி மழையில் சிக்கி நனைந்தபடி சென்றனர். தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோவை காந்திபுரம், டெஸ்டூல் பாலம், 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, சாய்பாபா காலனி, வேலாண்டிபாளையம், சித்தாபுதூர், பீளமேடு, கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம், அவிநாசி ரோடு நஞ்சப்பா ரோடு, சிங்காநல்லூர் பேருந்து நிலையம், என கோவை மாநகர் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
திடீர் கனமழையால் பொதுமக்களும் வியாபாரிகளும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளாகியுள்ளனர்.