• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி ரஜினிக்கு போஸ்டர்கள் ஒட்டப்போவதில்லை – ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி

December 29, 2020 தண்டோரா குழு

ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்துள்ள சூழலில், இது தங்களை ஏமாற்றியுள்ளதாகவும், இனிமேல் அவருக்காக கீ செயின்,போஸ்டர்கள் ஒட்டப்போவதில்லை என்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளாக அரசியல் பிரவேசம் குறித்து இழுத்தடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பை டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று இன்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சத்தியமூர்த்தி கூறுகையில்,

ரஜினிக்காக குடும்பத்தை, குழந்தைகளை பார்க்காமல் கடுமையாக உழைத்தோம். தலைவரின் இலக்கை அடைய கடுமையாக உழைத்தோம். எத்தனை ஆண்டுகள் வாழப்போறோம்? முடியவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? எதற்கு நடிக்கிறீர்கள்? அவர் ரசிகர்களுக்காக எதுவும் செய்யப்போவது இல்லை. இனி லட்சக்கணக்கில் செலவு செய்து ரசிகர் காட்சிகளை எடுக்க மாட்டோம். இனி கீ செயின் போஸ்டர் செய்யப்போவதில்லை. எங்களை ஏமாற்றிவிட்டீர்கள். இன்று கருப்பு நாள். எங்களை ஏமாற்றியது உங்கள் நெஞ்சில் உறுத்திக் கொண்டே இருக்கும் என்றார்.

மேலும் படிக்க