December 28, 2020
தண்டோரா குழு
ஆங்கில புத்தாண்டையொட்டி மதுக்கூடங்கள் இரவு 10 மணிக்கு மேல் இயங்க அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு, மனமகிழ் மன்றங்கள், விமானநிலைய உணவகங்கள், தமிழ்நாடு ஓட்டல், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட மதுபான உரிமம் பெற்ற அனைத்து இடங்களிலும் உள்ள மதுக்கூடங்கள் வருகிற 31-ந் தேதி இரவு 10 மணிக்கு மேல் இயங்க அனுமதி இல்லை.விதிமுறைகளுக்கு முரணாக மதுபானங்களை விற்பனை செய்தல் மற்றும் மதுக்கூடங்கள் செயல்பட்டால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.