December 27, 2020
தண்டோரா குழு
நல்லறம் அறக்கட்டளை மற்றும் வெஸ்டன் வேலி சைக்கிளிங் சார்பில் மாபெரும் எம்.டி.பி சேலஞ்ச் எனும் 3-வது ஆண்டாக சைக்கிள் போட்டி கோவை சுண்டாகாமுத்தூர் பகுதியில் இன்று காலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியினை நல்லறம்
அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி. அன்பசரன் வழிகாட்டுதல்படி, நல்லறம் அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியானது 8 பிரிவுகளில் நடைபெற்றது. 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு 3.5 கிலோமீட்டர் சைக்கிள் போட்டியும், 14 வயது முதல் பெரியவர்களுக்கான போட்டி 7.5 கிலோ மீட்டர் சைக்கிள் போட்டியும் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கான நல்லறம் அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நல்லறம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் நல்லறம் முருகவேல், ரோட்டரி மணிகண்டன், எஸ். ஆர் குமார், கவுன்சிலர் சிவகுமார், ஜெய்சங்கர், வெஸ்டன்வேலி சைக்கிளிங் தலைவர் ராபர்ட் ஆண்டனிராஜ், செயலாளர் சபரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.