December 26, 2020
தண்டோரா குழு
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில், அடர்வனத்தில் அமைந்துள்ளது குற்றாலம் நீர்வீழ்ச்சி. இது, கோவை மக்களின் மிக முக்கிய சுற்றுலாத்தலம். இதற்கிடையில், கொரோனா பரவல் காரணமாக கோவை குற்றாலம் மூடப்பட்டது.கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்த போதிலும் கோவை குற்றாலம் திறக்கப்படாதது சுற்றுலா பிரியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 9 மாதங்களுக்கு பிறகு கோவை குற்றாலம் நாளை (27-12-20) முதல் கடும் நிபந்தனைகளுடன் திறக்கப்பட உள்ளது. இதனால் கோவை மக்கள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.