December 26, 2020
தண்டோரா குழு
கோவை – கேரள எல்லையான வாளையாறு அருகே சாலையில் சென்ற கண்டைனர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாட்டரி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை – கேரள எல்லையான வாளையறு வழியாக பாலக்காடு நோக்கிச் கண்டைனர் லாரி நேற்று இரவு சென்றுள்ளது. அப்போது வாளையாறு சோதனைச்சாவடியை தாண்டி சென்ற போது லாரி ஓட்டுநர் சாலை ஓரத்தில் லாரியை நிறுத்த முயன்றதாக தெரிகிறது. அப்போது பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த கண்டைனர் லாரி சாலை ஓரத்தில் நின்றிழந்த இரு சக்கர வானத்தில் மோதி அங்கிருந்த இருந்த லாட்டரி கடைக்கு புகுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் மயிரிழையில் சாலை ஓரத்தில் இருந்த இரண்டு பேர் உயிர் தப்பிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி வைரல் ஆகி உள்ளது.
மேலும் லாரி நியுட்டரில் விழுந்ததால் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், ஓட்டுநர் ஹேண்டு பிரேக் பிடிக்காத்தால் விபத்து நிகழ்ந்ததாக வாளையறு போலீஸார் தெரிவித்தனர்.ஆனாலும் அதிஷ்டவசமாக அனைவரும் காயமின்றி தப்பியதாக தெரிவித்தனர்.