December 26, 2020
தண்டோரா குழு
கோவையில் கேரள ரியல் எஸ்டேட் அதிபரிடம் கத்திமுனையில் கொள்ளையடிக்கப்பட்ட கார், சிறுவாணி சாலையில் மீட்கப்பட்டுள்ளது.
கோவை நவக்கரை அருகே கேரள ரியல் எஸ்டேட் அதிபர் அப்துல் சலாம் என்பவர் வந்த காரை மறித்து, இரண்டு காரில் வந்த மர்ம கும்பல் ரூ.27 லட்சம் பணம்,காரை நேற்று கொள்ளையடித்து சென்றது.சம்பவம் தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கேரள எல்லையான நவக்கரையில் திருடப்பட்ட கார்,நேற்று நள்ளிரவில் சிறுவாணி சாலை மாதம்பட்டி அருகே மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்களுடன் ஆதாரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.