December 25, 2020
தண்டோரா குழு
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று கோவை அரசு மருத்துமவனையில் பிறந்த பெண் குழந்தைக்கு தங்கமோதிரம் அணிவிக்கபட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97 பிறந்த நாளை தமிழகம் முழுவதும் பா.ஜ.கவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த முதல்பெண் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிக்கபட்டது.கோவை மாவட்ட பா.ஜ.க பொது செயலாளர் ரமேஷ் மற்று கலை கலாச்சார பிரிவு தலைவர் சுறா முரளி ஆகியோர் பெண் குழந்தைக்கு மோதிரம் அறிவித்தனர்.
இதன் பின்னர் மாவட்ட பொது செயலாளர் ரமேஷ் கூறுகையில் இந்த குழந்தையின் கல்வி செலவு அனைத்தையும் பா.ஜ.கட்சி சார்பில் ஏற்கப்படும் என்றார்.